/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட்டில் சென்ற மாணவியை தாக்கி பட்டப்பகலில் 14 பவுன் பறிப்பு
/
மொபட்டில் சென்ற மாணவியை தாக்கி பட்டப்பகலில் 14 பவுன் பறிப்பு
மொபட்டில் சென்ற மாணவியை தாக்கி பட்டப்பகலில் 14 பவுன் பறிப்பு
மொபட்டில் சென்ற மாணவியை தாக்கி பட்டப்பகலில் 14 பவுன் பறிப்பு
ADDED : மே 24, 2024 07:09 AM
கெங்கவல்லி : சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாத்தப்பாடியை சேர்ந்தவர் அரவிந்த், 29.
கப்பலில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி, 26. பெரம்பலுார் மாவட்டம் உடும்பியத்தில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில், பி.எட்., 2ம் ஆண்டு படிக்கிறார்.நேற்று மதியம், 3:30 மணிக்கு, சேலம் மாவட்டம் வீரகனுாரில் இருந்து புனல்வாசல் வழியே, 'ஸ்கூட்டி'யில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர், உமாமகேஸ்வரியை தாக்கி, அவர் அணிந்திருந்த தாலிக்கொடி, சங்கிலி என, 14 பவுன் நகைகளை பறித்து சென்றார். இதுகுறித்து உமாமகேஸ்வரி அளித்த புகார்படி, கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.