/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு
/
வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு
ADDED : நவ 12, 2024 07:12 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி வனப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் குறித்து நவீன கண்காணிப்பு கேமரா பதிவுகளை, வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே பச்சமலை வனப்பகு-தியில் கடந்த செப்., 25ல், சிறுத்தை நடமாட்டம் தெரியவந்தது. மலை பகுதியில், ஒரு மாடு, மூன்று கன்று குட்டிகளை அடித்துக் கொன்றது. அதன்பின், தெடாவூரில் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து, வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றது. அக்., 10ல், திருச்சி மாவட்டம், துறையூர் வனப்பகுதிக்கு சிறுத்தை இடம் பெயர்ந்-தது.
இந்நிலையில் கடந்த, 8ல், மீண்டும் கெங்கவல்லி, பச்சமலை வனப்பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டது. வலசக்-கல்பட்டி ஏரி பகுதியையொட்டி உள்ள, வனப்பகுதியில் சிறுத்தை காலடி தடத்தை பார்த்து, மீண்டும் நடமாட்டம் உள்ளதை வனத்-துறையினர் உறுதி செய்தனர்.காலடி தடம் இருந்த இடங்களில் வனத்துறை சார்பில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்குள்ள கேமராவில், சிறுத்தை நட-மாட்ட பதிவுகள் குறித்து, வனத்துறையினர் ஆய்வு செய்து வரு-கின்றனர்.