/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.2.88 லட்சம் மோசடி கேமராவில் சிக்கிய வாலிபர்
/
ரூ.2.88 லட்சம் மோசடி கேமராவில் சிக்கிய வாலிபர்
ADDED : செப் 23, 2024 03:30 AM
சேலம்: சேலம், காமநாயக்கன்பட்டி ராஜா பட்டறையை சேர்ந்தவர் வசந்தா, 58. இவர், சாரதா கல்லுாரியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது அவரது கவனத்தை திசைதிருப்பிய மர்ம நபர், அவரது கார்டுக்கு பதில் மற்றொரு கார்டை கொடுத்தார்.
தொடர்ந்து அந்த கார்டை பயன்படுத்தி, 2.88 லட்சம் ரூபாய் எடுத்துள்ளார்.
அவர் புகார்படி, அழகாபுரம் போலீசார், இரு பிரி-வுகளில் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் உள்ளிட்ட போலீசார், ஏ.டி.எம்., மையத்தில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியிடம் வடமாநில நபர் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.பணத்தை எடுத்த அந்த மர்ம நபர், அடுத்த நாள் மீண்டும் வந்து பணம் எடுப்பதும் பதிவாகி இருந்ததை, போலீசார் கண்டுபிடித்-தனர். அந்த காட்சிகள் அடிப்படையில், வடமாநில வாலிபரை, தனிப்படையினர் தேடி வருகின்றனர்.