/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி
/
பைக் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி
ADDED : நவ 02, 2024 04:26 AM
சங்ககிரி: சங்ககிரி அருகே, மோட்டார் பைக் மீது, கார் மோதி வாலிபர் இறந்தார். ஒருவர் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த செந்தில் மகன் அரவிந்த், 25. இவரது நண்பர் சங்ககிரி ஆர்.எஸ்., வீட்டு வசதி-வாரியத்தை சேர்ந்த ரவி மகன் கணேசன், 25. இருவரும் நேற்று முன்தினம் இரவு, 7:10 மணிக்கு சங்ககிரியிலிருந்து திருச்செங்-கோடு நோக்கி கே.டி.எம்., டியூட் பைக்கில் சென்று கொண்டிருந்-தனர்.புள்ளிப்பாளையம் பகுதியில் செல்லும் போது, எதிரே வந்த கார், பைக் மீது மோதியது. இதில் அரவிந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயமடைந்த கணேசன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு-கிறார்.
சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.