/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தானப்பட்டி மாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தங்க கவசம்
/
அ.தானப்பட்டி மாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தங்க கவசம்
அ.தானப்பட்டி மாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தங்க கவசம்
அ.தானப்பட்டி மாரியம்மனுக்கு ரூ.50 லட்சத்தில் தங்க கவசம்
ADDED : மே 29, 2025 01:32 AM
சேலம் சேலத்தில் பழமையான எட்டுப்பட்டி மாரியம்மன்களில் ஒன்றான, அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் சுவாமிகளுக்கு தங்க கவசம் செய்யும் திருப்பணிக்கு, 12 ஆண்டுக்கு முன் அன்னதான டிரஸ்ட் தொடங்கப்பட்டு பக்தர்கள், தொழிலதிபர்களிடம் நன்கொடை பெறப்பட்டது. இக்கோவில் கும்பாபிேஷகம் வரும் ஜூன், 6ல் நடக்க உள்ளது.
இதை முன்னிட்டு, விநாயகர், மூலவர் மாரியம்மன், திரவுபதி அம்மன்களுக்கு, 350 கிராம் தங்கத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தங்க கவசங்கள், சேலத்தில் உள்ள ஸ்தபதியால் செய்யப்பட்டு நேற்று கோவில் நிர்வாகி சொக்கலிங்கம், அர்ச்சகர் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கும்பாபிேஷகத்துக்கு பின் ஜூன், 15ல் அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்படும் என, பக்தர்கள் தெரிவித்தனர்.