/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்கம்பத்தில் ஏறும்போது தவறி விழுந்த ஒயர்மேன் சாவு
/
மின்கம்பத்தில் ஏறும்போது தவறி விழுந்த ஒயர்மேன் சாவு
மின்கம்பத்தில் ஏறும்போது தவறி விழுந்த ஒயர்மேன் சாவு
மின்கம்பத்தில் ஏறும்போது தவறி விழுந்த ஒயர்மேன் சாவு
ADDED : மே 25, 2024 02:11 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி, மோட்டூர் காட்டுவளவை சேர்ந்தவர் செங்கோட்டையன், -47. இவர் கன்னந்தேரி மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணிபுரிந்தார்.
கடந்த, 23ல் எருமைப்பட்டிதியில் உள்ள அண்ணாதுரை வீட்டுக்கு மின்சாரம் வரவில்லை. ஒயர்மேன் செங்கோட்டையன், அன்று
மதியம், 12:30 மணிக்கு மின்கம்பம் அருகே இருந்த வீட்டின் மீது ஏறி, அதிலிருந்து மின்கம்பத்தில் ஏற முயன்றார். அப்போது தவறி விழுந்த அவர், படுகாயம்
அடைந்தார்.
இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.