/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடுப்பை பற்றவைத்தபோது சேலையில் தீப்பற்றி பெண் பலி
/
அடுப்பை பற்றவைத்தபோது சேலையில் தீப்பற்றி பெண் பலி
ADDED : ஆக 12, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், கட்டையமுத்து முதலி தெருவை சேர்ந்த, நெசவு தொழிலாளி சத்யபிரியா, 39.
இவர் கடந்த ஜூலை, 23ல் வீட்டில் சமையல் செய்வதற்கு காஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். எரியாததால் தீக்குச்சியால் பற்ற வைத்தார்.அப்போது சேலையில் தீப்பற்றியது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்து தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். அவரது மகள் மாலதி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.