/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தவர் நண்பனுடன் கைது

ADDED : பிப் 11, 2025 07:35 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்ணை, கூட்டு பலாத்காரம் செய்த வேன் டிரைவர், நண்பனுடன் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை நாவக் கரையை சேர்ந்தவர் வேன் டிரைவர் ரூத்வேந்திரன், 26. இவர், இன்ஸ்டாகிராமில்
கடந்த, 3 மாதங்களுக்கு முன் தண்டராம்பட்டு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, 20 வயது பெண்ணுக்கு காதல்
வலை விரித்துள்ளார். அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய
இளம்பெண், அவருடன் தொடர்ந்து பேசி வந்தார். நேரில் சந்திக்க, அப்பெண்ணை ரூத்வேந்திரன் அழைத்துள்ளார்.
அவரை நம்பிய இளம்பெண் கடந்த, 7 ல் திருவண்ணாமலை நாவக் கரைக்கு சென்றார். அவரிடம், தனியாக
பேசலாம் எனக்கூறி, அருகே, வனப்பகுதியை ஒட்டியுள்ள சுடுகாட்டுக்கு அழைத்து சென்ற ரூத்வேந்திரன், தன்
நண்பரான தனுஷ், 20, என்பவருடன் சேர்ந்து, அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட அப் பெண், நேற்று முன்தினம் தண்டராம் பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரித்து, ரூத்வேந்திரன், தனுஷ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.