/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை'யால் தடுமாறி விழுந்த வாலிபர் பலி
/
போதை'யால் தடுமாறி விழுந்த வாலிபர் பலி
ADDED : ஆக 06, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், இளம்பிள்ளை, காடையாம்பட்டி அருகே வசிப்பவர் முருகன். இவரது மகன் தினேஷ்குமார், 24. இளம்பிள்ளையில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம், 'டியோ' மொபட்டில், ஹெல்மெட் அணியாமல், சேலம் ஜங்ஷன் அருகே வந்துள்ளார்.
அப்போது மது அருந்திவிட்டு, வீட்டுக்கு இரும்பாலை வழியே புறப்பட்டார். காலை, 11:30 மணிக்கு, இரும்பாலை, 2வது கேட் மோகன் நகர் அருகே உள்ள வேகத்தடையில் ஏறியபோது, தவறி விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.