/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு தீப்பொறி பட்டதில் பைக் பெட்ரோல் டேங்க் வெடித்து வாலிபர் படுகாயம்

ADDED : பிப் 28, 2025 07:00 AM
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், சின்னம்மாசமுத்திரம் குடித்தெருவை சேர்ந்த பச்சமுத்து, 85, நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய, நேற்று மதியம், 1:00 மணிக்கு ஊர்வலமாக சென்றுகொண்டிருந்தபோது, மாரியம்மன் கோவில் அருகே பட்டாசு வெடித்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் ஓட்டிவந்த, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் பெட்ரோல் டேங்க் மீது தீப்பொறி பட்டது. அதில் பெட்ரோல் டேங்க் வெடித்து, தனசேகருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் மீட்டு, பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.