/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜாமினில் தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
/
ஜாமினில் தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூன் 17, 2025 01:08 AM
சேலம், சேலம், கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன், 39. இவர் கடந்த, 2013ல், வீராணம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கடந்த மார்ச் மாதம், குமரேசனுக்கு முதலில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். பின் வீராணம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும் என, நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில் ஜாமினில் வெளியே சென்றவர், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அவரை பிடிக்க சேலம்-2வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்திருந்தது.
வீராணம் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று ஜான்சன் பேட்டை மயானம் பகுதியில், இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில், அஸ்தம்பட்டி போலீசார் குமரேசனை கைதுசெய்தனர்.