sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்; 8 ஆண்டுகளுக்கு பின் உருளுதண்டம்

/

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்; 8 ஆண்டுகளுக்கு பின் உருளுதண்டம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்; 8 ஆண்டுகளுக்கு பின் உருளுதண்டம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா துவக்கம்; 8 ஆண்டுகளுக்கு பின் உருளுதண்டம்


ADDED : ஜூலை 08, 2024 07:37 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஆடித்திருவிழாவை முன்னிட்டு சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடந்தது. முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு, 11 வகையான அபிஷேகம் அம்மனுக்கு செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து காலை, 8:20 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உள்பட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும், 23ல் அம்மனுக்கு பூச்சாட்டு; 24ல் கொடியேற்றத்தை தொடர்ந்து அன்றிரவு முதல், 29ம் தேதி வரை தினமும் விசேஷ அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கும். 30ல் கம்பல் நடுதல், திருக்கல்யாணம்; 31 முதல் ஆக., 6 வரை தினமும் இரவு அம்மன் வீதியுலா; ஆக., 3ல் ஊஞ்சல் உற்சவம், 5ல் சக்தி அழைப்பு, 6ல், சக்தி கரகம்; 7ல் பொங்கல் வைபவம் மற்றும் பக்தர்கள் உருளுதண்ட பிரார்த்தனை நடக்கிறது.

திருப்பணி உள்ளிட்டவற்றால் தடைபட்ட உருளுதண்ட பிரார்த்தனை, 8 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. 11ல் சப்தாபரணம், 12ல் மஞ்சள் நீராட்டு விழா, 13ல் பால்குட ஊர்வலம், 16ல் ஊஞ்சல் உற்சவம், விடையாற்றி உற்வசத்துடன் ஆடித்திருவிழா நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us