/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆடி திருவிழா முகூர்த்த கம்பம் நடல்
/
ஆடி திருவிழா முகூர்த்த கம்பம் நடல்
ADDED : ஜூலை 03, 2025 01:31 AM
சேலம், சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், ஆடி திருவிழாவுக்கு முகூர்த்த கம்பம் நேற்று நடப்பட்டது. இதை ஒட்டி மூலவர் மாரியம்மன், முகூர்த்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசி, மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின், 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் முழங்க, முகூர்த்த கம்பம் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணி மண்டபம் முன் நடப்பட்டது. கம்பத்துக்கு காப்பு கட்டி, வளையல்கள் அணிவித்து மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது.
வரும், 23ல் கொடியேற்றம், 29ல் கம்பம் நடுதல், ஆக., 4ல் சக்தி அழைப்பு, 5ல் சக்தி கரகம், 6, 7ல் பொங்கல், அலகு குத்துதல், உருளுதண்டம் நடக்கும். ஆக., 8ல் ஆடி திருவிழாவில் முதல்முறையாக, புது தேரில் அம்மனை எழுந்தருளச்செய்து தேரோட்டம் நடக்க உள்ளது. ஆக., 10ல் சப்தாபரணம், 11ல் மஞ்சள் நீராட்டு வைபவம், 12ல் பால்குட ஊர்வலம் மகா அபிேஷகத்துடன் திருவிழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, பூசாரிகள், கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.