/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
108 லிட்டர் நெய்யால் அம்மனுக்கு அபிேஷகம்
/
108 லிட்டர் நெய்யால் அம்மனுக்கு அபிேஷகம்
ADDED : ஆக 25, 2025 03:14 AM
சேலம்: உலக அமைதி, மழை வேண்டி, சேலம், அம்மாபேட்டை செங்-குந்தர் மாரியம்மன் கோவிலில், செங்குந்தர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 2ம் ஆண்டாக மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.
மூலவருக்கும், உற்சவ அம்மனுக்கும், பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்-வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு, 108 லிட்டர் நெய்யால் அபிேஷகம் செய்யப்பட்டது. பின் மூலவர், உற்சவருக்கு பட்-டாடை உடுத்தி, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த பின், அர்ச்சனை நடந்தது. பின் மேள தாளம் முழங்க, அம்ம-னுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை, கிளப் தலைவர் சிவக்-குமார், செயலர் கோபிநாத், பொருளாளர் தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.