ADDED : அக் 11, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
சேலம்,:சேலம் சிவதாபுரம், மெய்யன் தெருவை சேர்ந்தவர் ரகுபதி, 39. இவரை, 2024ல், இரு சக்கர வாகனம் திருடியதாக, கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், ஜாமினில் விடுவிக்கப்பட்ட அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.
அவரை கைது செய்ய, நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து, அவரை, போலீசார் தேடி வந்த நிலையில், வீட்டருகே உள்ள ஒரு பகுதியில் பதுங்கி
இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் நேற்று ரகுபதியை கைது செய்தனர்.
