/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருப்பாவை ஒப்புவித்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
/
திருப்பாவை ஒப்புவித்தல் மாணவ, மாணவியர் ஆர்வம்
ADDED : பிப் 08, 2025 06:46 AM
சேலம்: சனாதன தர்ம வித்யா பீடம் சார்பில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி சேலம், கோட்டையில் நேற்று நடந்தது. ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம செயலர் யதாத்மானந்தா தலைமை வகித்தார். அதில், எல்.கே.ஜி., முதல், 2ம் வகுப்புக்கு, 1 - 3 திருப்பாவை பாசுரங்கள், 3 முதல், 5ம் வகுப்புக்கு, 4 - 8 பாசுரங்கள், 6 முதல்,
8ம் வகுப்புக்கு, 9 - 18 பாசுரங்கள், 9, 10ம் வகுப்புக்கு, 16 - 30 பாசுரங்கள் வரை ஒப்புவிக்கும்படி போட்டி
நடந்தது. 17 பள்ளி-களில் இருந்து, 235 மாணவ, மாணவியர், பாடல்களை ஒப்புவித்-தனர். ஒவ்வொரு
பிரிவிலும் முதல், 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு கோப்பை, சான்றிதழ்
வழங்கப்பட்டன. 2 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இதில் வித்யா பீட செயலர் சந்திரசேகர்,
அகில பாரத அய்யப்பா சேவா சங்க சேலம் மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.