/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'முறைகேட்டில் ஈடுபடும் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை'
/
'முறைகேட்டில் ஈடுபடும் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை'
'முறைகேட்டில் ஈடுபடும் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை'
'முறைகேட்டில் ஈடுபடும் பங்க் உரிமையாளர் மீது நடவடிக்கை'
ADDED : செப் 19, 2024 07:55 AM
சேலம்: ''அளவு, முறைகேடுகளில் ஈடுபடும் பங்க் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, டி.எஸ்.பி., வடிவேலு எச்சரித்துள்ளார்.
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சார்பில், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., வடிவேலு தலைமை வகித்து பேசியதாவது:
பங்க் உரிமையாளர்கள், தினமும் சேமிப்பில் உள்ள பெட்ரோல் மாதிரிகளை எடுத்து, விற்பனை அதிகாரி மூலம் சோதனை செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி பதிவுகளை
சேமிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் கொண்டு வரும் வாகன எண், பிற விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.வாடிக்கையாளர் குறை இருந்தால் தெரிவிக்கும்படி, டோல் ப்ரி, பங்க் உரிமையாளர் எண்கள் தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும். பெட்ரோல் அளவு, விலை தெளிவாக தெரியும்படி வைக்க வேண்டும். அளவு,
முறைகேடுகளில் ஈடுபடும் பங்க் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சந்தையில் வாங்குதல், விற்பது குற்றம். தீயணைப்பான் அலாரத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
வாடிக்கையாளர் அளிக்கும் புகார் மீது விசாரித்து சம்பந்தப்பட்ட பங்க்கில் முறைகேடு இருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.இன்ஸ்பெக்டர் சங்கீதா உள்ளிட்ட போலீசார், பங்க் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

