ADDED : மே 31, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 11வது வார்டு தாசிக்காடு பகுதிக்கு, 10வது வார்டு மயானம் வழியே தார்ச்சாலை செல்கிறது. மயானத்தில் சுகாதார வளாகம் உள்ளது.
ஆனால் மயான பகுதியில் தெருவிளக்கு இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்துள்ளது. சுகாதார வளாகத்துக்கு மக்கள் செல்ல அச்சப்பட்டு, சாலையோரம் திறந்தவெளியில் இயற்கை உபாதைக்கு செல்லும் அவலம் உள்ளது. அங்குள்ள, 5 மின் கம்பங்களில் தெருவிளக்குகளை பொருத்த, ஒரு மாதத்துக்கு முன் தனியே மின் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் விளக்குகள் பொருத்தவில்லை. இதற்கு, டவுன் பஞ்சாயத்து, பனமரத்துப்பட்டி மின் வாரிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.