/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'
/
'நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'
ADDED : ஏப் 30, 2025 01:23 AM
சேலம்:
சேலம் மாநகராட்சியில் வரி வசூல், வரி வருவாய் அதிகரிப்பது குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்து பேசியதாவது:
மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, வரி வசூல் முக்கியம். அதனால் மாநகராட்சியில், 4 மண்டலங்களிலும், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி, புது வரி இனங்களை கண்டறிந்து, துரிதமாக வசூலிக்க வேண்டும். நிலுவை வரியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கமிஷனர் இளங்கோவன், மாநகர பொறியாளர் செல்வநாயகம், மாநகர நல அலுவலர் முரளிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில், விஜயகுமார் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.

