/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தகுதியான வாக்காளர் பெயர் இடம்பெற நடவ-டிக்கை'
/
'தகுதியான வாக்காளர் பெயர் இடம்பெற நடவ-டிக்கை'
ADDED : டிச 31, 2025 05:26 AM
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்-காளர் பதிவு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். மத்திய அரசின் நகர்புற, வீட்டுவசதி வாரிய இணை செயலரும், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளருமான குல்தீப் நாராயணன், தலைமை வகித்து பேசியதாவது:
மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,346 மையங்களில் கடந்த, 27, 28ல் நடந்த சிறப்பு முகாம், வரும், 3, 4ல் தொடர்ந்து நடக்கி-றது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் விழிப்-புணர்வு, இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்ப படிவம், அதன் மீதான மேல் நடவடிக்கை, புது வாக்காளர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்கம் செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்-கொள்ளப்பட்டது. தகுதியான வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபடாமல் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

