/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பீர் பாட்டிலை உடைத்ததில் தகராறு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
/
பீர் பாட்டிலை உடைத்ததில் தகராறு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
பீர் பாட்டிலை உடைத்ததில் தகராறு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
பீர் பாட்டிலை உடைத்ததில் தகராறு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
ADDED : டிச 31, 2025 05:25 AM

வாழப்பாடி: வாழப்பாடி, மேட்டுப்பட்டி, போயர் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல், 31. நேற்று முன்தினம் மாலை, செல்லியம்மன் நகர் அருகே உள்ள சில்லி கடையில் இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீமுகிலன், 21, முத்துவேல், 25, ஆகியோர், பீர் பாட்டிலை உடைத்தனர்.
அதற்கு வெற்றிவேல், 'சாலையில் ஏன் உடைக்கிறீர்கள்' என கேட்டார். இதில் அந்த இருவரும், வெற்றிவேலிடம் தக-ராறில் ஈடுபட்டு, அவரை பீர் பாட்டிலால் தாக்-கினர். காயம் அடைந்த வெற்றிவேலை, மக்கள் மீட்டு, மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்-துவமனையில் சேர்த்தனர். வெற்றிவேல் புகார்-படி, வாழப்பாடி போலீசார், ஸ்ரீமுகிலன், முத்து-வேலை, நேற்று கைது செய்தனர்.
மகனுக்கு 'காப்பு'
வாழப்பாடி, சிங்கிபுரம் கிழக்கு வீதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி ரஞ்சித், 35. அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 40. இவர்கள் இடையே நிலப்பிரச்னையில் முன்
விரோதம் உள்ளது.
கடந்த, 28ல் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்-டது. அதில் முருகேசன், அவரது மகன் தினேஷ், 28, ஆகியோர், ரஞ்சித்தை தாக்கினர். காயம-டைந்த அவர், வாழப்பாடி அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் புகாரில், வாழப்பாடி போலீசார் விசாரித்து, முருகேசன், தினேஷ் மீது வழக்குப்பதிந்தனர். நேற்று தினேைஷ கைது
செய்தனர்.

