sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கூட்டுறவு, தனி நபர்கள் மூலம் 32 மருந்தகம் திறக்க நடவடிக்கை

/

கூட்டுறவு, தனி நபர்கள் மூலம் 32 மருந்தகம் திறக்க நடவடிக்கை

கூட்டுறவு, தனி நபர்கள் மூலம் 32 மருந்தகம் திறக்க நடவடிக்கை

கூட்டுறவு, தனி நபர்கள் மூலம் 32 மருந்தகம் திறக்க நடவடிக்கை


ADDED : பிப் 10, 2025 07:31 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மண்டலத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மூலம், 32 முதல்வர் மருந்தகம் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, திறப்பு விழாவுக்கு தயார்படுத்த, கடைக்கு ஒரு கூட்டுறவு சார்பதிவாளர் வீதம், 32 சார் பதிவாளர்களை நியமித்து, இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி சேலம் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம், 2 கடை, சேலம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், என்.ஜி.ஜி., கூட்டுறவு பண்டகசாலை, சின்னதிருப்பதி நகர கூட்டுறவு கடன் சங்கம், ஏ.என்.புதுார் மற்றும் கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலா ஒன்று என, சேலம் சரகத்தில், 7 மருந்து கடைகள் திறக்கப்படுகின்றன.

அதேபோல் ஆத்துார் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், நரசிங்கபுரம், மஞ்சினி, பெத்தநாயக்கன்பாளையம், மகாலட்சுமி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் தலா ஒன்று என, ஆத்துார் சரகத்தில், 5 கடைகள்; வெள்ளாளப்பட்டி, வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலா ஒன்று என, ஓமலுார் சரகத்தில், 2; கொங்கணாபுரம், இடங்கணசாலை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தலா ஒன்று என, சங்ககிரி சரகத்தில், 2 என, கூட்டுறவு நிறுவனம் சார்பில், மொத்தம், 16 முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகின்றன.

இதுதவிர, தாரமங்கலத்தில் - 2, கொண்டப்பநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சிறுவாச்சூர், ஆத்துார் பஸ் ஸ்டாண்ட், ஊனத்துார், தேக்கம்பட்டி, ஜலகண்டாபுரம், காரிப்பட்டி, மாமரத்துக்கோட்டை, கோனுார், இளம்பிள்ளை, வைகுந்தம், இடைப்பாடி என, 16 ஊர்களில் தனி நபர்கள் மூலம் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகின்றன. இதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள, 32 கூட்டுறவு சார் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us