/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை பாயும்'
/
'சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை பாயும்'
'சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை பாயும்'
'சட்டவிரோத செயலுக்கு துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை பாயும்'
ADDED : ஜூன் 11, 2025 02:17 AM
சேலம்,தமிழக போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், சேலத்தில் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தில், 5 ஆண்டுகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள், வெகுவாக குறைந்துள்ளன. மேலும் குறைக்க, ஊரக உட்கோட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். குறிப்பாக போதைப்பொருள் விற்பனை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு துணை போகும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க உளவுத்துறை மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். குற்றச்சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில், பதிவேடுகள் அடிப்படையில் விரைந்து தண்டனை பெற்றுத்தர, சம்பந்தப்பட்ட போலீஸ் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேநேரம் போதிய போலீசார் இல்லாததால், பணி நெருக்கடிக்கு
இடையே சிறப்பாக பணிபுரிய வேண்டிய சூழல் உள்ளது. கொங்கு
மண்டலத்தில் பண்ணை வீடுகளில் தனியே வசிக்கும் முதியோரை குறி வைத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், 'போக்சோ' வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.