sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விதிமீறல் புகாரில் 100 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

/

விதிமீறல் புகாரில் 100 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

விதிமீறல் புகாரில் 100 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை

விதிமீறல் புகாரில் 100 நிமிடத்தில் நடவடிக்கை: தேர்தல் அலுவலர் எச்சரிக்கை


ADDED : மார் 17, 2024 02:16 PM

Google News

ADDED : மார் 17, 2024 02:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டர் பிருந்தாதேவி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் உடனுக்குடன் அமலுக்கு வந்துவிட்டது. மாவட்டத்தில் கடந்த ஜன., 22ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, 14,56,299 ஆண்கள்; 14,71,524 பெண்கள், 299 திருநங்கை என, 29,28,122 பேர் உள்ளனர். அவர்களில், 85 வயதுக்கு மேற்பட்டவர், 25,577 பேர், மாற்றுத்திறனாளி, 25,160 பேர் உள்ளனர்.

லோக்சபா தொகுதியில் ஆண்கள், 8,23,336; பெண்கள், 8,25,354; திருநங்கை, 221 பேர் என, 16,48,911 பேர் உள்ளனர். வாக்காளர் ஓட்டுப்போட வசதியாக, 1,249 மையங்களில், 3,257 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 264 பதற்றமானவை. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்து, மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க, 33 பறக்கும்படை, 33 நிலை கண்காணிப்பு குழு, 11 வீடியோ பார்வை குழு, 11 வீடியோ கண்காணிப்பு குழு, 3 ஊடக சான்று கண்காணிப்பு குழு, 11 கணக்கு சரிபார்ப்பு குழு, தினசரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழு என, 7 வகை குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும்.

தேர்தல் பணியில், 15,000 அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல உரிய ஆவணம்; ரசீது கண்டிப்பாக தேவை. குறிப்பாக வெள்ளி பொருள் கொண்டு செல்ல, 'டெலிவரி சலான்' வேண்டும். அதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், 'இ-வே' ரசீது மிக முக்கியம்.

அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள அனைத்து சுவர் எழுத்து, சுவரொட்டிகள், காகிதங்கள், விளம்பர பலகை, பதாகைகள், கொடிகள் ஆகியன தேர்தல் அறிவிப்பு வெளியான, 24 மணி நேரத்துக்குள் அகற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நடத்தை விதிகள் மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரம் இயங்கும் தேர்தல் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளது.

1800 - 425 - 7020 என்ற கட்டணமில்லா எண், 0427 - 2450031, 2450032, 2450035, 2450046 ஆகிய தொலைபேசி எண்கள், 94899-39699 என்ற எண்ணுக்கு வாட்ஸாப் செயலி மூலமும் தெரிவிக்கலாம். தவிர, e-- Vigil என்ற செயலி மூலமும் புகார் தெரிவிக்கலாம். அதன் மீது, 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us