/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் எடுக்கப்படும் இடங்களில் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
/
மண் எடுக்கப்படும் இடங்களில் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
மண் எடுக்கப்படும் இடங்களில் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
மண் எடுக்கப்படும் இடங்களில் கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
ADDED : செப் 28, 2024 01:19 AM
வாழப்பாடி, செப். 28-
வாழப்பாடி தாலுகாவில் உள்ள காரிப்பட்டி, புழுதிக்குட்டை ஆனை மடுவு அணை,
சிங்கிபுரம் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில், விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து, இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் பணீந்திர ரெட்டி, நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, எடுக்கப்படும் மண் விவசாயத்திற்கு தான் பயன்படுத்தப்படுகிறதா என, ஊராட்சி மன்ற தலைவரிடம் விசாரித்தார். சேலம் கலெக்டர் பிருந்தா தேவி, ஆர்.டி.ஓ., அபிநயா, சரபங்கா வடிநில கோட்ட நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஆனந்தன், துணை இயக்குனர் (கனிம வளம்) ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.