/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூடுதல் வகுப்பறை: அமைச்சர் திறப்பு
/
கூடுதல் வகுப்பறை: அமைச்சர் திறப்பு
ADDED : பிப் 17, 2024 07:13 AM
சேலம் : சேலம், குகையில், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 79.35 லட்சம் ரூபாய் மதிப்பில், மாநகராட்சி கல்வி நிதியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டன. அந்த கட்டடங்களை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, நேற்று திறந்து வைத்தார். கலெக்டர் பிருந்தாதேவி, கமிஷனர் பாலச்சந்தர் உள்ளிட்ட அதிகாரிகள், மேயர் ராமச்சந்திரன், சேலம் எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
மேலும், 28வது வார்டில், 95 லட்சம் ரூபாய் மதிப்பில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம், 60 லட்சம் ரூபாயில் நாய்கள் அறுவை சிகிச்சை மையம்; 3வது வார்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 72 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை; 14வது வார்டில், 26.94 லட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாக கட்டடம்; 6வது வார்டில், 1.63 கோடி ரூபாயில் முல்லை கார்டன் ஓடை சீரமைப்பு; 85 லட்சம் ரூபாயில், திடக்கழிவு மேலாண் பொருள் மீட்பு வசதி மையம், காந்தி நகரில், 36.28 லட்சம் ரூபாயில் சுகாதார வளாக கட்டடம் உள்பட, 11.29 கோடி ரூபாயில், முடிவுற்ற, 17 பணிகளை திறந்து வைத்தார். தவிர, 12.98 கோடி ரூபாய் மதிப்பில், 8 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.