/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சட்டம், ஒழுங்கில் கவனம் கூடுதல் டி.ஜி.பி., அறிவுரை
/
சட்டம், ஒழுங்கில் கவனம் கூடுதல் டி.ஜி.பி., அறிவுரை
சட்டம், ஒழுங்கில் கவனம் கூடுதல் டி.ஜி.பி., அறிவுரை
சட்டம், ஒழுங்கில் கவனம் கூடுதல் டி.ஜி.பி., அறிவுரை
ADDED : அக் 09, 2025 01:29 AM
ஆத்துார், தமிழக கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன்ஆசீர்வாதம் நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது ஆத்துார் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட 7 ஸ்டேஷன்கள், மகளிர் ஸ்டேஷன், போக்குவரத்து பிரிவு ஸ்டேஷன்களில் உள்ள வழக்குகள், குற்ற நிகழ்வுகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து, சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ், ஆத்துார் டவுன், ஊரகம், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது டேவிட்சன்ஆசீர்வாதம், 'குற்ற வழக்குகள், நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். கொலை உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் விரைவாக தண்டனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாப்பு பணியில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல்வர் தனி பிரிவில் பெறப்பட்ட புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி, குற்றச்சம்பவங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என அறிவுரை வழங்கினார்.