/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
/
'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
'ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி மேலும் ஒருவர் சிக்கினார்
ADDED : அக் 09, 2025 01:29 AM
சேலம், 'ரிசர்வ் வங்கி' பெயரை பயன்படுத்தி, இரிடியம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என ஆசை காட்டி, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஏராளமானோரிடம், பல கோடி ரூபாய் மோசடி நடந்தது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் கென்னடி அளித்த புகார்படி, சேலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில் நித்யானந்தம், சந்திரா, அன்புமணி, முத்துசாமி, கேசவன் உள்பட, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று, திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்த லட்சுமணன்குமார், 29, என்பவரை கைது செய்தனர். கணினி இன்ஜினியரான அவர், ரிசர்வ் வங்கி பெயரில் பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்து கொடுத்து, 11 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து, இரு மொபைல் போன்கள், ஹார்ட் டிஸ்க், பிரின்டர் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.