/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆலையில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
/
ஆலையில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ஆலையில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ஆலையில் புகுந்து ஊழியர்களை மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
ADDED : அக் 09, 2025 01:29 AM
மேட்டூர், சென்னை, அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மோகன், 71. இவர் சேலம் மாவட்டம் மேட்டூர், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து புதுரெட்டியூரில், அரசு அனுமதியுடன், புரோட்டின் பவுடர் தயாரிக்கும் நியூட்ரி பிளேவர்ஸ் ஆலை நடத்துவதோடு, அதன் நிர்வாக இயக்குனராக உள்ளார்.
புரோட்டின் பவுடர் தயாரிப்பதால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர், விவசாயம் பாதிப்பதாக மக்களிடம் கூறி, ஆலைக்குள், புதுரெட்டியூரை சேர்ந்த ராமசாமி, 70, மணி, 75, ஆகியோர் அத்துமீறி, கடந்த, 27ல் புகுந்து, ஊழியர்களை பணிபுரிய விடாமல் தடுத்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மோகன் நேற்று அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார், ராமசாமி, மணி மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.