/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிர்வாகிகள் பங்கேற்றனர். அம்மன் கோவில் தகராறு 20 பேர் மீது வழக்குப்பதிவு

ADDED : ஆக 04, 2025 08:19 AM
ஓமலுார்: தாரமங்கலம் அருகே தொளசம்பட்டி ராஜ வீதியை சேர்ந்தவர் அருணாசலம், 47. ஜவுளி வியாபாரி. இவரது உறவினர் மாதேஸ். இவர்கள் இடையே பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் முப்பூசை செய்வதில் முன்விரோதம் இருந்தது. கடந்த, 28ல் மாதேஸ், கோவில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை எடுத்துச்சென்றபோது, அருணாசலம் தடுத்து கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அருணாசலம் தாக்கப்பட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் புகார்படி, மாதேஸ் உள்பட, 20 பேர் மீது தொளசம்பட்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.