/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை ஜூன் 2ல் கலந்தாய்வு தொடக்கம்
/
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை ஜூன் 2ல் கலந்தாய்வு தொடக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை ஜூன் 2ல் கலந்தாய்வு தொடக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் சேர்க்கை ஜூன் 2ல் கலந்தாய்வு தொடக்கம்
ADDED : மே 30, 2025 01:29 AM
சேலம் :சேலம், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், இளநிலை மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு, ஜூன், 2ல் தொடங்க உள்ளது.
இதுகுறித்து, அக்கல்லுாரி முதல்வர் காந்திமதி அறிக்கை:
அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கு, முதல் கட்ட கலந்தாய்வு, ஜூன், 2ல் தொடங்க உள்ளது.அன்று விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவில், சேர்க்கை நடைபெறும். ஜூன், 4ல், அறிவியல் பிரிவு, 5ல் வணிகவியல், பொருளாதாரம், 6ல் தமிழ், ஆங்கிலம், வரலாறு பாடங்களுக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது.
இதற்குரிய தரவரிசை பட்டியல், கல்லுாரி இணையதளம், கல்லுாரி தகவல் பலகையில் வெளியிடப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவியர், உரிய ஆவணங்களோடு, காலை, 9:00 மணிக்கு, கல்லுாரி கலையரங்கத்துக்கு வர வேண்டும்.