/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சத்துணவு மையத்தில் எடை குறைந்த முட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
சத்துணவு மையத்தில் எடை குறைந்த முட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
சத்துணவு மையத்தில் எடை குறைந்த முட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
சத்துணவு மையத்தில் எடை குறைந்த முட்டை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : செப் 26, 2024 02:56 AM

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வரை, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அங்கு நடைபெறும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், சத்துணவு மையத்தை பார்வையிட்டார். அப்போது, சில முட்டைகள் சிறிதாகவும், பல பெரிதாகவும் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த முட்டைகளை தனித்தனியாக எடை போட்டார்.
பல முட்டைகள் அனுமதிக்கப்பட்ட எடையை விடக் குறைவாக இருந்தன.
நிருபர்களிடம் ஜெயசங்கரன் கூறியதாவது:
ஒரு அட்டைக்கு, இரண்டு முதல் மூன்று முட்டைகள், 'புல்லட்' முட்டை எனும், சிறு அளவிலான, எடை குறைந்த முட்டைகள் இருந்தன. தலா, 46 முதல், 52 கிராம் வரை முட்டையின் எடை இருக்க வேண்டும். ஆனால், சில முட்டைகள், 38 முதல், 41 கிராம் தான் இருந்தன.
இம்முட்டைகளில் ஊட்டச்சத்து குறைவாக இருக்கும். சில முட்டைகளில், தமிழக அரசு முத்திரை இல்லை. முட்டையில் முறைகேடு நடப்பதால், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட சத்துணவு மைய அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், ''முட்டைகள் மீது, 'சீல்' சரியாக விழுவதில்லை என ஒப்பந்ததாரர்கள் கூறுகின்றனர். எடை குறைந்த மற்றும் புல்லட் முட்டை புகார் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

