/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் குளமான வகுப்பறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பார்வை
/
மழையால் குளமான வகுப்பறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பார்வை
மழையால் குளமான வகுப்பறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பார்வை
மழையால் குளமான வகுப்பறை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பார்வை
ADDED : அக் 24, 2025 01:29 AM
பனமரத்துப்பட்டி, சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, காளியாகோவில்புதுார் அரசு தொடக்கப்பள்ளியில், 28 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி கட்டடம், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது.
நேற்று முன்தினம் பெய்த மழையால், கூரை வழியே கசிந்த மழைநீர் வகுப்பறையில் கொட்டியது. நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், வகுப்பறையில் குளம்போல் தேங்கிய மழைநீரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கூரையில் தண்ணீர் கசிந்தபடி இருந்தது. பாடப்புத்தகம், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் நனைந்து விட்டன. இதனால் மற்றொரு கட்டடத்தில், மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர். பள்ளி கட்டடத்தை வீரபாண்டி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்து பார்வையிட்டார். சுற்றுச்சுவருடன் புது கட்டடம் கட்டித் தருவதோடு, சமையல் கூடத்தை விரிவுபடுத்தி தர வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.