ADDED : நவ 15, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., வெற்றிக்கு அறிவுரை
தாரமங்கலம், நவ. 15-
அ.தி.மு.க.,வின் சங்ககிரி சட்டசபை தொகுதி, தாரமங்கலம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஓட்டுச்சாவடி முகவர் கள் ஆலோசனை கூட்டம் கணக்குப்பட்டியில் நேற்று நடந்தது.
ஒன்றிய செயலர் காங்கேயன் தலைமை வகித்து பேசுகையில், ''வரும், 2026 சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்.,சை முதல்வராக்க, அ.தி.மு.க., ஓட்டு வங்கியை அதிகரிக்க வேண்டும். நம் குடும்பத்தில் உள்ள அனைவரது ஓட்டுகளை பாதுகாத்தால், அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி,'' என்றார். மாவட்ட விவசாய அணி துணை செயலர் சின்னகண்ணு, ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ஏழுமலை, ஒன்றிய துணை செயலர் கணேசன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.