/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் வடிகால் பணியில் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர் எச்சரிக்கை
/
மழைநீர் வடிகால் பணியில் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர் எச்சரிக்கை
மழைநீர் வடிகால் பணியில் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர் எச்சரிக்கை
மழைநீர் வடிகால் பணியில் தாமதம் அ.தி.மு.க., கவுன்சிலர் எச்சரிக்கை
ADDED : அக் 24, 2024 01:31 AM
மழைநீர் வடிகால் பணியில் தாமதம்
அ.தி.மு.க., கவுன்சிலர் எச்சரிக்கை
சேலம், அக். 24-
சேலம் மாநகராட்சி, 22வது வார்டு, சிவதாபுரத்தில், சேலத்தாம்பட்டி ஏரி உபரிநீர் செல்லும் கால்வாய் பணி, ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழையால், அப்பகுதி குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, அந்த வார்டு கவுன்சிலர் செல்வராஜ் கூறியதாவது: மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் சாலையை பறித்து போடுவது மட்டுமே விரைவாக நடந்தது. கட்டுமான பணி நடப்பதே இல்லை. சாலையை பறிக்கும்போது குடிநீர் குழாய்களை உடைத்ததால், இரு மாதங்களாக அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக லாரியில் வினியோகம் செய்யப்படுகிறது. பலமுறை நிர்வாகத்தில் புகார் அளித்தும் பணி நடப்பதாக தெரியவில்லை. நேற்று முன்தினம் தார்ச்சாலைக்கும், கட்டி முடிக்கப்பட்ட கால்வாய்க்கும் இடையே உள்ள பள்ளத்தில் ஒரு குழந்தை விழுந்து அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது. இதனால் பணியை முடிக்கக்கோரி, கமிஷனர் அலுவலகம் முன், இன்று காலை தனிநபராக தர்ணாவில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

