ADDED : பிப் 17, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் : அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76வது பிறந்த நாள் விழா, வரும், 24ல் கொண்டாடப்பட உள்ளது.
வெகுவிமரிசையாக கொண்டாட, பொதுச்செயலர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார். அதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர, பேரூர், ஒன்றியம், கிராம பகுதிகளில், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து, வரும், 18ல்(நாளை) ஓமலுாரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில் தலைமை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிராம, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.