/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., கொடி கம்பம் நட தி.மு.க., எதிர்ப்பால் பதற்றம்
/
அ.தி.மு.க., கொடி கம்பம் நட தி.மு.க., எதிர்ப்பால் பதற்றம்
அ.தி.மு.க., கொடி கம்பம் நட தி.மு.க., எதிர்ப்பால் பதற்றம்
அ.தி.மு.க., கொடி கம்பம் நட தி.மு.க., எதிர்ப்பால் பதற்றம்
ADDED : ஜன 20, 2024 07:54 AM
மேச்சேரி : மேச்சேரி, மல்லிகுந்தம் பஸ் ஸ்டாண்ட் அருகே, அ.தி.மு.க.,வை சேர்ந்த பாஸ்கர் டீக்கடை வைத்துள்ளார். அதன் அருகே, அ.தி.மு.க., கொடி கம்பம் நட்டு கொடியேற்ற, மேச்சேரி ஒன்றிய நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை, மேச்சேரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலர்கள் சந்திரசேகரன், செல்வம், மேச்சேரி பேரூர் செயலர் குமார், வக்கீல் பிரிவு புறநகர் மாவட்ட செயலர் சித்தன் உள்பட பலர், கொடி கம்பம் நட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த தி.மு.க., ஒன்றிய செயலர் சீனிவாச பெருமாள், முன்னாள் செயலர் காசி விஸ்வநாதன், ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர், கொடி கம்பம் நட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு நடக்கூடாது என வாக்குவாதம் செய்தனர். இதனால், அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, சர்ச்சைக்குரிய இடத்தில் கொடி கம்பம் நட வேண்டாம் என போலீசார், அ.தி.மு.க.,வினரிடம் அறிவுறுத்தினர். அதை ஏற்ற அவர்கள், மதியம், அருகே உள்ள மற்றொரு இடத்தில் கம்பம் நட்டு கொடியேற்றினர்