/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் கோட்ட அலுவலகத்தை திறப்பதாக அமைச்சர் உளறல் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் கிண்டல்
/
மின் கோட்ட அலுவலகத்தை திறப்பதாக அமைச்சர் உளறல் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் கிண்டல்
மின் கோட்ட அலுவலகத்தை திறப்பதாக அமைச்சர் உளறல் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் கிண்டல்
மின் கோட்ட அலுவலகத்தை திறப்பதாக அமைச்சர் உளறல் அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் கிண்டல்
ADDED : ஏப் 13, 2024 07:26 AM
ஆத்துார் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, ஆத்துார் நகர் பகுதியான உடையார்பாளையம், காந்தி நகர், ராணிப்பேட்டை, கடைவீதி, புதுப்பேட்டை, முல்லைவாடி, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
இரு நாட்களுக்கு முன் ஆத்துார், கெங்கவல்லியில் பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் உதயநிதி, இத்தொகுதியில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச்செய்தால் கெங்கவல்லியில் மின் கோட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதாக பேசியுள்ளார்.
ஓராண்டுக்கு முன் முதல்வர் ஸ்டாலின், மின்கோட்ட அலுவலகத்தை, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். அந்த அலுவலகம் எங்கே உள்ளது என, மக்கள், விவசாயிகள் தேடி வருகின்றனர். அது கூட தெரியாமல் மக்களை ஏமாற்றுவதற்கு, முதல்வர் திறந்த மின்கோட்ட அலுவலகத்தை, மீண்டும் திறப்பதாக அமைச்சர் உளறியபடி பேசியுள்ளார். தி.மு.க.,வின் திட்டங்கள் எல்லாம் இப்படி தான் உள்ளன.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பொய்யை கூறி ஓட்டு கேட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். முதல்வர் திறந்த அலுவலகத்தை, இவர் எப்படி திறப்பார்? பொய் பேசும் தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட வேண்டும். பட்டதுபோதும், இரட்டை இலை போதும் என, தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர். ஒற்றை விரலில், தி.மு.க.,வினரை விரட்டியடிக்க வேண்டும் என, பொதுச்செயலர் இ.பி.எஸ்., அழைப்பை மக்கள் ஏற்றுள்ளதால், அ.தி.மு.க., அலை வீசி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நகர செயலர் மோகன், கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார், தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

