/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளிவாசல் பகுதியில் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு
/
பள்ளிவாசல் பகுதியில் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு
பள்ளிவாசல் பகுதியில் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு
பள்ளிவாசல் பகுதியில் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 06, 2024 01:47 AM
ஆத்துார்:கள்ளக்குறிச்சி
லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து,
ஆத்துார், புதுப்பேட்டை, பழையபேட்டை முஸ்லிம் பள்ளிவாசல் பகுதியில்
நேற்று, சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமையில் ஆத்துார்
எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் உள்ளிட்ட கட்சியினர், இரட்டை இலை
சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.
அப்போது தொழுகை முடித்து வந்த
முஸ்லிம் சமுதாயத்தினரிடம், அ.தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள்,
தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, குமரகுருவுக்கு ஆதரவு
தரும்படி துண்டு பிரசுரங்களை கொடுத்து ஓட்டு சேகரித்தனர்.
ஆத்துார்
நகர செயலர் மோகன், முன்னாள் சேர்மன் காளிமுத்து, மாவட்ட சிறுபான்மை
பிரிவு செயலர் மக்புல்பாஷா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை செயலர்
குமார், தே.மு.தி.க., நிர்வாகிகள் சுல்தான்பாஷா, இன்பவேல்,
எஸ்.டி.பி.ஐ., நகர நிர்வாகி அமீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.அதேபோல்
கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில், அ.தி.மு.க., சார்பில்,
பள்ளிவாசல் முன், கெங்கவல்லி தொகுதி, எம்.எல்.ஏ., நல்லதம்பி
தலைமையில் கட்சியினர் இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தனர்.
அப்போது,
சிறுபான்மை சமுதாய மக்களுக்கு, அ.தி.மு.க., உறுதுணையாக இருந்து
வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும், அ.தி.மு.க., ஆட்சியில்
மட்டும் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி
வேட்பாளர் குமரகுருவுக்கு, இரட்டை இலை சின்னத்துக்கு
ஓட்டுபோடும்படி துண்டுபிரசுரம் வழங்கினர். தம்மம்பட்டி பேரூர்
செயலர் ஸ்ரீகுமரன், கெங்கவல்லி ஒன்றிய செயலர்கள் ராஜா, ரமேஷ், பேரூர்
செயலர் இளவரசு, தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட
கட்சியினர் பங்கேற்றனர்.

