/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திட்டப்பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுரை
/
திட்டப்பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுரை
ADDED : டிச 18, 2024 07:01 AM
மேட்டூர்: மேச்சேரி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளும் திட்டப்பணிகளை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: மேச்சேரி ஒன்றியத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகள், ஊரக வளர்ச்சி முகமை மூலம் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட, 3,062 பணிகள் எடுக்கப்பட்டன. அதில், 2,274 பணிகள் முடிந்த நிலையில் மீதி, 788 பணிகள் நடக்கின்றன.
அதில் வெள்ளாறு ஊராட்சி எருமப்பட்டி துவக்கப்பள்ளியில் வகுப்பறை புனரமைத்தல்; குட்டப்பட்டியில் இரு வகுப்பறை கட்டும் பணி; எருமப்பட்டியில் அங்கன்வாடி கட்டடம், எருமப்பட்டி, குட்டப்பட்டி துவக்கப்பள்ளிகளில் கழிப்பறை கட்டும் பணிகள்; கொப்பம்பட்டி, எம்.காளிப்பட்டி ஊராட்சிகளில், 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், கொப்பம்பட்டியில் சமுதாய குளம் கட்டுதல் உள்பட, 14 வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை தரமாக, உரிய காலத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.