/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்கள் நலன் சார்ந்த பணிக்கு அறிவுரை
/
மக்கள் நலன் சார்ந்த பணிக்கு அறிவுரை
ADDED : ஆக 08, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், த.வா.க., சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில், ஆத்துார், தென்னங்குடிபாளையத்தில், மாவட்ட செயல் வீரர் கூட்டம், நேற்று நடந்தது. ஆத்துார் தொகுதி பொறுப்பாளர் சசிகுமார் தலைமை வகித்தார்.
அதில், கட்சி வளர்ச்சி பணிகள், மக்கள் நலன் சார்ந்த அரசியல் பணி மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மாநில நிர்வாகி ராஜலிங்கம், ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்.