நிலக்கடலையில் கழுத்து அழுகல் கட்டுப்படுத்த அறிவுரை வழங்கல்
நிலக்கடலையில் கழுத்து அழுகல் கட்டுப்படுத்த அறிவுரை வழங்கல்
ADDED : ஜூன் 19, 2026 02:38 AM
பனமரத்துப்பட்டி; சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் வரும், 21 வரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பம், 25 முதல், 36 டிகிரி செல்ஷியஸ் காணப்படும். காற்றின் திசை தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 6 முதல் 8 கி.மீ., வேகத்தில் வீசும். காற்றின் ஈரப்பதம், 50 முதல், 80 சதவீதம் இருக்கும். தக்காளி சாகுபடி நிலத்தில் சரியான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். விதைத்தல், உரமி-டுதல், பூச்சி மருந்து தெளித்தல் பணிகளை தவிர்க்கவும். மக்காச்சோள விதைப்பு, நடவு வேலைகளை ஒத்திவைக்கவும். விளை நிலங்-களில் மழைநீர் தேங்காதபடி வடிகால் வசதி ஏற்-படுத்தவும்.
தோட்டக்கலை, காய்கறி பயிர்களுக்கு நீர்பா-சனம் செய்ய வேண்டாம். அடுத்த சில நாட்க-ளுக்கு அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், தென்னையில் காய்ந்த மற்றும் முதிர்ந்த காய்-களை பறித்து விடவும்.
வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரிட்ட வயலில் கழுத்து அழுகல் நோய் தாக்கம் பரவ-லாக தென்படுகிறது. இளம் பயிரில் வரும் நோயை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சாணக்கொல்லியுடன் ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைத்த உடன் மண்ணின் மேற்பரப்பில் டிரைக்கோடெர்மா விரிடி 1 கிலோ, 10 கிலோ மட்கிய சாணத்துடன் கலந்து துாவ வேண்டும்.
