ADDED : ஜூன் 19, 2026 02:37 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின், தமிழகத்திலும் நடத்தப்படும் என, தமிழக சட்டசபையில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதை, பா.ம.க., தலைவர் அன்புமணி வரவேற்றார். இதையடுத்து ஓமலுாரில், மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் பா.ம.க.,வினர், பஸ் ஸ்டாண்ட் எதிரே, பட்டாசு வெடித்து கொண்டாடினர். தொடர்ந்து மாநில இளைஞரணி செயலர் அண்ணாமலை, வன்னியர் சங்க மாநில செயலர் முருகன், ஒன்றிய
செய-லர்கள், மக்கள், வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்-கினர்.அதேபோல் இடைப்பாடியில், நகர செயலர் சண்முகம் தலைமையில், துணை செயலர் வைத்தி உள்ளிட்ட, பா.ம.க.,வினர், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
