/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாவட்ட எல்லை பகுதிகளில் கேமரா பொருத்த அறிவுரை
/
மாவட்ட எல்லை பகுதிகளில் கேமரா பொருத்த அறிவுரை
ADDED : டிச 27, 2024 07:43 AM
சேலம்: சேலம், நெத்திமேட்டில் உள்ள, எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்து, எஸ்.பி., கவுதம் கோயல் பேசியதாவது:
பள்ளி பகுதிகளில் காலை, மாலையில், மாணவர்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட வேண்டும். குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். நீதிமன்ற பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்ட எல்லை பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்க, கண்டறிய, அரசு, தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர்.

