sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அஞ்சல் சேமிப்பு கணக்குகளை அதிகப்படுத்த அறிவுரை

/

அஞ்சல் சேமிப்பு கணக்குகளை அதிகப்படுத்த அறிவுரை

அஞ்சல் சேமிப்பு கணக்குகளை அதிகப்படுத்த அறிவுரை

அஞ்சல் சேமிப்பு கணக்குகளை அதிகப்படுத்த அறிவுரை


ADDED : மார் 04, 2024 07:23 AM

Google News

ADDED : மார் 04, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : சேலத்தில் மாவட்ட சிறு சேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார்.

அதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன்(சிறுசேமிப்பு) பேசியதாவது:

தனியார் நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்து பாதிக்கப்படுவதை, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு

ஏற்படுத்தி அவர்களிடம், அரசு சேமிப்பு திட்டங்களை எடுத்துரைத்து முதலீட்டை ஈர்க்க வேண்டும். தனியார், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட, அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி கிடைப்பதை எடுத்து கூறி, பாதுகாப்பான அஞ்சல் சேமிப்பு கணக்கு எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் அஞ்சல் கணக்கு தொடங்குவதை இலக்காக வைத்து முகவர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பார்த்திபன் பேசுகையில், 'ஒவ்வொரு முகவரும் இலக்கு நிர்ணயித்து அஞ்சலக சேமிப்பு திட்டம் பற்றி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

கடந்த, 2022 - 23ல், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகவர்களின் மகன்கள், மகள்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. பின் மூத்த முகவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us