/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை
/
மாநில எல்லையில் கடத்தல் எஸ்.பி.,க்கள் ஆலோசனை
ADDED : பிப் 22, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:தமிழக - கர்நாடகா எல்லையில், சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்கள் உள்ளன. தேர்தல் நெருங்குவதால், மாநில எல்லை கிராமங்களில் வசிக்கும் ரவுடிகள் வனப்பகுதியில் பதுங்குவது குறித்து தகவல் தெரிவிக்கவும், ஆயுதம், மதுபானம் கடத்தலை தடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் மேட்டூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
சேலம், தர்மபுரி எஸ்.பி.,க்கள் அருண் கபிலன், ஸ்டீபன் ஜேசுபாதம், ஈரோடு ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், கர்நாடகா, சாம்ராஜ் நகர் மாவட்ட கலால் ஏ.டி.எஸ்.பி., அசப்பீர், இரு மாநில போலீஸ் அதிகாரிகள், கலால் அலுவலர்கள் பங்கேற்றனர்.