/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
எஸ்.ஐ.ஆர்., பணியை கண்காணிக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : நவ 21, 2025 03:11 AM
ஓமலுார், அ.தி.மு.க., சார்பில், ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பி.எல்.ஏ., - பி.எல்.ஏ., 2 ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே உள்ள, சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது: எஸ்.ஐ.ஆர்., பணியில், தி.மு.க., அரசு குளறுபடி செய்து, இரட்டை வேடம் போடுகிறது. தமிழகம் முழுதும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகளை மிரட்டி, அ.தி.மு.க., ஓட்டுகளை திருட முயற்சிக்கின்றனர். அதனால் அதிகாரிகள் வீடுகள் தோறும் செல்லும்போது, நம் கட்சியினர் உடன் சென்று கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, நகர, ஒன்றிய செயலர்கள் பங்கேற்றனர்.