/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

ADDED : நவ 29, 2025 01:01 AM
பெத்தநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் பரவலாக காணப்படும், 'ஸ்பொடோப்டேரா ருஜிபர்டா' எனும் படைப்புழு பரவலை கட்டுப்படுத்த விவசாயிகள் முன்நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பின்பற்ற வேண்டிய, ஒருங்கிணைந்த மேலாண் முறைகள் வருமாறு:
ஒரு கிலோ விதைக்கு சையான்ரினிலிபுரோல், 19.8 சதவீதம், தையோமிதாக்சம், 19.84 மி.லி., கலந்து பயன்படுத்த வேண்டும். வேம்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு, 100 கிலோ வீதம் அடியுரமாக வைக்க வேண்டும். தட்டைப்பயிறு, துவரை, சூரியகாந்தி, துலுக்க சாமந்தி, எள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயிரிட்டு உயிரியல் சமநிலையை பராமரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு, 5 இனக்கவர்ச்சி பொறிகள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். 1,5-20 நாட்கள் பயிர் வயதில், குளோரான்டினிலிப்ரோல், 18.5 - 0.4 மி.லி., அல்லது புளுபெண்டமைடு, 480 - 0.4 மி.லி., தெளிக்கலாம். 35- முதல், 40 நாட்கள் பயிர் வயதில், எமாமெக்டின் பென்சோயேட், 5 - 0.4 கிராம் அல்லது ஸ்பைநிடிரோம் 11.7 - 0.5 மி.லி., பயன்படுத்தலாம். விவசாயிகள் பூச்சி தாக்குதலை தொடக்க நிலையில் கண்காணித்து, வேளாண் அலுவலக அதிகாரிகள் ஆலோசனைப்படி மேலாண்மை செய்யலாம்.