/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு
/
பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு
பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு
பா.ம.க., ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்க முடிவு
ADDED : நவ 29, 2025 01:00 AM
மேட்டூர், மேட்டூர் தொகுதி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்க கூட்டம், மேச்சேரியில் நேற்று நடந்தது. சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகித்தார். அதில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, டிச., 12ல் சேலம் கலெக்டர் அலுவலகம் முன், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது; கடந்த, 4ல் வாழப்பாடி, வடுகத்தாம்பட்டியில் சேலம் மேற்கு எம்.எல்.ஏ., அருள் மீது நடந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில வன்னியர் சங்க செயலர் தங்கய்யாசாமி, பா.ம.க.,வின் சேலம் மேற்கு மாவட்ட செயலர் ராஜேந்திரன், வன்னியர் சங்க மேற்கு மாவட்ட தலைவர் மாரப்பன், தலைவர் செல்வராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

