/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் 3 குழந்தைக்கு மோதிரம்
/
துணை முதல்வர் பிறந்தநாள் 3 குழந்தைக்கு மோதிரம்
ADDED : நவ 29, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை, தி.மு.க.,வினர் நேற்று முன்தினம் கொண்டாடினர். அன்று, மேட்டூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட, 3 பேருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இதனால், சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி,
நேற்று மதியம், 3 குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார். தொடர்ந்து குழந்தைகள் நல பாதுகாப்பு பெட்டகத்தை, பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கினார். சேலம் மேற்கு மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், மேட்டூர் நகர செயலர் காசிவிஸ்வநாதன், தலைவர் ராஜா, பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

